puvani'in seyaliyil sile thuli! >>arimugam....

அனைவருக்கும் வணக்கம். 

 

கைத்தொலைப்பேசியை மையமாகக் கொண்டு இயங்கும் " புவனியின் செயலியில் சில துளி" எனும் தமிழ் மொழிக்கான செயலி, மாணவர்கள் எளிமையான முறையில் தங்களுக்கு வழங்கப்பட்டிடுக்கும் இலக்கணக் கூறுகளைக் கற்றுக் கொள்வதற்காகச் சிறப்பு உருவம் பெற்றுள்ளது. தற்பொழுது எங்கும் எப்பொழுதும் கைத்தொலைப்பேசியின் தாக்கத்தில் இருக்கும் மாணவர்கள் தமிழ் மொழிக்கான இச்செயலியைத் தங்களது வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்களின் தேர்வுக் களத்திற்கும் இச்செயலி துணைப்புரியும். 

     இச்செயலியில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான இலக்கண கூறுகள் சுருங்கிய விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதனோடு இணைந்து அக்கூறுகளுக்கான பயிற்சிகளும் கீழ் பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இச்செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை வாசிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் உள்வாங்கியதைச் சோதிக்கும் தளமாகவும் இச்செயலி அமைகின்றது. 

 

 

" புவனியின் செயலியில் சில துளி" செயலியை உபயோகப்படுத்தும் மாணாவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது:

 

  •  ஒவ்வொரு குறிப்புகளுக்குக் கீழ் இணைக்கப்பட்டிருக்கும் பயிற்சியைச் செய்யும்போது உங்களுடைய "gmail account" பயன்படுத்திப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.