punariyal!

4.0 புணரியல்

 

-->>இரண்டு சொற்கள் ஒன்றுபடப் புணர்வது புணர்ச்சி.

-->>நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் ஒன்றுப்படப் புணர்வதே புணர்ச்சி.

-->>புணர்ச்சி இருவகைப்படும். 

 

1) இயல்பு புணர்ச்சி

-->> நிலைமொழியில் உள்ள இறுதி எழுத்தும் வருமொழியில் உள்ள முதல் எழுத்தும் மாற்றமின்றிப் புணர்வது இயல்பு புணர்ச்சி.

-->> எடுத்துக்காட்டு :  மலர் +,வளையம் =மலர் வளையம் 

-->> நிலைமொழி ஈற்றில் மெய் எழுத்து இருந்து வருமொழி முதலில் உயிரெழுத்து வருமாயின் அம்மெய்யும் அவ்வுயிரும் இயல்பாகப் புணரும். 

-->>மெய் +உயிர் --> ஆண்+அழகன்= ஆணழகன்

 

2) விகாரப் புணர்ச்சி

-->>இரு சொற்கள் புணரும்போது நிலைமொழியின் ஈற்றிலோ வருமொழியின் முதலிலோ மாற்றங்கள் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சியாகும். 

-->>மூன்று வகைப்படும் --->> தோன்றல்

                                          --->> திரிதல் 

                                          --->> கெடுதல்

 

தோன்றல் 

 

-->> நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஓர்  எழுத்துப் புதிதாகத் தோன்றும். 

 

  • உயிர் + உயிர்மெய் -->> அ + தலைவன் = அத்தலைவன்
  • சுட்டு+ யகரம் -->> அ+ யானை = அவ்யானை  
  • எகர வினா + யகரம் -->> எ+யானை = எவ்யானை
  • ஓரெழுத்து ஒருமொழி  + வல்லெழுத்து  -->>  பூ+சோலை= பூஞ்சோலை
  • தனிக்குறிலை அடுத்து மெய் வந்து , வருமொழி உயிரெழுத்தில் தொடங்கினால் நிலைமொழியின் இறுதியில் உள்ள மெய் இரட்டிக்கும்.

           -->> கண்+இமை = கண்ணிமை

  • உடம்படுமெய் 

           -->> நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து வந்து வருமொழி முதலில் ஏதாவது ஓர் உயிரெழுத்து இருந்தால் அவை இயல்பாக புணர இயலா. அவ்விரு                
​                 உயிர்களையும் உடன்படுத்துவதற்குத் தோன்றும் மெய்யெழுத்தே உடம்படுமெய்யாகும். 

           -->> வகர உடம்படுமெய் (வ்) 

                 நிலைமொழி ஈற்றில் இ, ஈ, ஐ முதலிய உயிர் எழுத்துகளைத் தவிர்த்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் "வ" கரம் தோன்றும். 

           -->> யகர உடம்படுமெய் ( ய்) 

                     நிலைமொழி ஈற்றில் இ,ஈ,ஐ முதலிய உயிர் எழுத்துகள் வந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் "ய" கரம் தோன்றும் .

 

 

திரிதல் 

 

-->>நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல் புணர்ச்சியாகும்.

  • ணகர, னகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல்

                >> ண்--> ட் ஆகும் (க்,ச்,ப் மட்டும்)

                >>ன் முன் த்--> ற் ஆக மாறும்

  • மகர ஒற்று (ம்) க்,ச்,த் ஆகிய வல்லினத்தோடு புணரும்போது இன மெல்லெழுத்தாகத் திரியும்.
  • லகர,ளகர, மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல்.

               >> ள் --> ட் ஆக மாறும் (க், ச், ப் மட்டும்)

               >>ல் --> ற் ஆக மாறும் (க், ச்,ப் மட்டும்)

               >> ள்  முன் த் --> ட் ஆக மாறும் 

               >> ல் முன் த் --> ற் ஆக மாறும் (க்.ச்.ப் மட்டும்) .

 

கெடுதல்

 

-->>நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது 1 / ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் கெடுவது  கெடுதல் புணர்ச்சி.

 

  • மகரம் + இடையினம்

           --->  நிலைமொழி ஈற்றில் மகர மெய் வரும்பொழுது வருமொழி இடையினமாக இருக்குமாயின் அவ்விடத்தில் மகரம் கெடும்.

           ---> எடுத்துக்காட்டு : அறம் +வினை = அறவினை

 

  • "மை" ஈற்றுப�� பண்புப்பெயர் புணர்ச்சி

            ---> நிலைமொழியில் உள்ள "மை" ஈறு வருமொழியோடு புணரும்போது "மை" ஈறு கெட்டு இனவெழுத்துடன் மறைந்தும் திரிந்தும் தோன்றியும் வரும்.

            ---> எடுத்துக்காட்டு : செம்மை + கோல் = செங்கோல்

 

  • எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி

​       

        >> 1 -10 வரையிலான  நிலைமொழி எண்ணுப்பெயருடன் 10 என்னும் வருமொழி இணைந்து வரும்.

            --->  எடுத்துக்காட்டு : இரண்டு + பத்து = இருபது 

 

       >>10 என்னும் நிலைமொழியுடன் 1-10 வரையிலான வருமொழி எண்ணுப்பெயர் இணைதல்.

          ---> எடுத்துக்காட்டு : பத்து + இரண்டு = பன்னிரண்டு

>> 1 - 10 வரையிலான நிலைமொழியுடன் அதே வருமொழி எண்ணுப்பெயர் புணர்தல் 

---> எடுத்துக்காட்டு : ஒன்று +ஒன்று = ஒவ்வொன்று

  • திசைப்புணர்ச்சி
  • ---> திசையைக் குறிக்கும் சொல்லைத் திசைப்பெயர் என்பர். 
  • ---> திசைச்சொல்லோடு புணரும் போது பின்வருமாறு புணரும்.  

வலிமிகும் இடங்கள்

 

  • சொற்றொடர்களில் வருமொழி “க், ச், த், ப்”  ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வல்லெழுது மிகும்.
  • வருமொழியின் முதல் எழுத்து வல்லினமாக இருந்தால் வல்லினம் மிகும்.

 

     

      

 

வலிமிகா இடங்கள்

 

  • சொற்றொடர்களில் , வருமொழி “க்,ச்,த்,ப்” ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழி ஈற்றில் சில இடங்களில் வலிமிகாது.

 

        

 

 

பயிற்சி! 

https://goo.gl/forms/v1sAS9sbgrBY6p3d2