vaakkiyam!

3.0 வாக்கியம்

 

  • முழுக்கருத்தைத் தெரிவிக்கும் ஒரு சொல் கூட்டம் / முழு சொற்றொடர்
  • தமிழ் வாக்கியங்களில் 3  உறுப்புகள்  உள்ளன.
  • எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்.

 

1. எழுவாய்

  • ஒரு செயல் நிகழ்வதற்குக் காரணமாய் இருப்பது எழுவாய்.
  • பயனிலையில் நின்று யார், எது,எவை,யாவை  முதலிய வினாக்கள் எழுப்பினால் கிடைக்கும் விடை "எழுவாய்"

2. பயனிலை

  • எழுவாயின் செயலைக் காட்டும் சொல் பயனிலை.

 

3. செயப்படுபொருள்

  • பயனிலையில் நின்று யாரை, எதை, எவற்றை முதலிய வினாக்களை எழுப்பும் போது கிடைக்கும் விடை "செயப்படுபொருள்" எனப்படும்.

 

வாக்கிய வகைகள்

 

கருத்து, அமைப்பு எனும் அடிப்படையில் பிரிக்கலாம்.

 

கருத்து அடிப்படையில் வாக்கியங்களை 4 வகைகளாகப் பிரிக்கலாம். 

1. செய்தி வாக்கியம் --> தகவலை வெளிப்படுத்துதல்

2. வினா வாக்கியம் --> தகவலைப் பெறுதல்

3. விழைவு வாக்கியம் --> வேண்டுக்கோள், கட்டளை, சபித்தல், வாழ்த்துதல் ஆகிய அடிப்படையில் அமையும். 

4. உணர்ச்சி வாக்கியம் --> உள்ளத்து உணர்ச்சியைக் காட்டுதல்!

 

அமைப்பு அடிப்படையில் வாக்கியங்களை 3 வகையாகப் பிரிக்கலாம். 

1. தனி வாக்கியம் --> 1 எழுவாய் / பல எழுவாய்கள் = 1 பயனிலையைப் பெற்று வருதல்.

2. தொடர் வாக்கியம் --> 1 எழுவாய்= பல பயனிலைகலைப் பெற்று வருதல்

3. கலவை வாக்கியம்

--> ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களை/ செய்திகளை ஒரே வாக்கியத்தில் கொண்டு வருவது. 

--> ஒரு முதன்மை வாக்கியத்தைச் சார்ந்து 1 / ஒன்றுக்கு மேற்பட்ட சார்பு வாக்கியங்கள் இடம் பெறும்.

--> 'என்னும்', 'என்றும்', முதலிய சொற்களையும் கொண்டு வரும். 

 

நேர்க்கூற்று/ அயற்கூற்று

 

நேர்க்கூற்று

  • ஒருவர் கூறியதை அவர் கூறியவாறே கூறுவது.
  • நேர்க்கூற்றில் ஒருவர் கூறியவற்றை (" ..") இரட்டை மேற்கோள் குறியிட்டுக் காட்ட வேண்டும்.

 

அயற்கூற்று

  • நேர்க்கூற்றிலுள்ள சொற்களை மட்டும் மாற்றிப் பொருள் மாறாதவாறு படர்க்கை இடத்திற்கு ஏற்ப கூறுவது.
  • அயற்கூற்றில் இரட்டை மேற்கோள் குறி இடப்படுவதில்லை. 
  • நேர்க்கூற்றிலிருந்து அயற்கூற்றாக மாற்றும் போதும் அயற்கூற்றிலிருந்து நேர்கூற்றாக மாற்றும் போதும் ஏற்படும் மாற்றங்களை அட்டவனைக் காட்டுகின்றது.
  •  

 

சொற்றொடர் / தொடர்

 

  • ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்தால் சொற்றொடர் எனப்படும்.
  • சொற்றொடர் 2 வகைப்படும்

1. தொகை நிலைத் தொடர்

  • ஒன்றுக்கு மேற்பட்டச் சொற்கள் ஒரு சொல் போல் இயங�கும் போது, இடையில் சொல்லோ உருபோ மறைந்து வருதல் தொகை எனப்படும்.
  • எடுத்துக்காட்டு : கரும்பலகை --> கருமையான பலகை  ( 'ஆன' என்ற பண்புருபு மறைந்து வருதல்.)

   தொகைகளின் வகைகள்

 

>>வேற்றுமைத்தொகை

--> வேற்றுமை உருபு மறைந்து வரும் சொற்றொடர் வேற்றுமைத் தொகையாகும். 

 

>>வினைத்தொகை

--> முதற்சொல் வினையடியாகவும் தொடர்ந்து வரும் சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்

--> காலம் காட்டும் உருபுகள்  மறைந்து வரும் 

-->எடுத்துக்காட்டு :    ஊறுகாய் --> ஊறிய காய் (இறந்த காலம்)

                                                      --> ஊறுகின்ற காய் ( நிகழ் காலம்)

                                                       --> ஊறும் காய் ( எதிர்காலம்)
 

>>பண்புத்தொகை

--> பண்பை விளக்கும் உருபுகளான " ஆகிய", ஆன" ஆகியவைச் சொற்றொடர்களில் மறைந்து வரும். 

-->எடுத்துக்காட்டு : வட்டக்கண் --> வட்டமான கண்

 

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

 

-->சொற்றொடரில் நிலைமொழியில் சிறப்புப் பெயரும் வருமொழியில் பொதுப்பெயரும் இணைந்து பண்பைக் குறிக்கும் உருபுகள் மறைந்து வரும். 

 

>> உவமைத் தொகை

-- >சொற்றொடரில் "போல", "போன்ற", "அன்ன", நிகர", "ஒப்ப" முதலிய  உவமை உருபுகள் மறைந்து வரும். 

 

>>உம்மைத்தொகை

-->  சொற்றொடரில் "உம்" என்ற சொல் மறைந்து பொருள் தருமாயின் உம்மைத் தொகை எனப்படும்.

 

 

2. தொகா நிலைத் தொடர்.

-->சொற்றொடர்களில் உருபுகளோ சொற்களோ மறையாமல் வெளிப்படையாக இருந்து பொருள் தருமாயின் தொகாநிலைத் தொடர் எனப்படும்.

--> ஒன்பது வகைப்படும்.

 

பயிற்சி !

https://goo.gl/forms/9kRqHUshQyziN3p63